முன் தூங்கி பின் எழுந்த பகல் பதினொன்று முப்பதுக்கு

அகமுடையாளின் சிறுங்குடலை பெருங்குடல் திங்க

காளைக்கோ காது அடைத்துக்கொண்டுவிட்டது

ஓர் துறையில் இரையெடுக்கலாமெனில்

ஹொட்டேல்களில் தள்ளு முள்ளு கூட்டம்

பொட்டலம் கட்டச் சொல்லலாமென்றால்

வறுத்த சோறுக்கு தொடுகறியும் மிச்சமில்லை

பழையதை ஏற்குமா பதிவிரதா தர்மம்

அழைப்பு மணியெங்கும் ஒலிக்கக் கேட்டு ஓடி வந்து பார்த்தான்

பசிக்கு பத்தும் பறந்திருக்க இவன் பதினொன்று

கருத்துகள்